சொல் பொருள்
ஒன்றை ஓரிடத்து நிலைபெற நிறுத்த வேண்டும் என்றால் தூக்குதல் முதற்பணி. அதற்குரிய இடத்தில் உரிய வகையில் நிறுத்திக் கிட்டித்தல் அடுத்த பணி. இவ்விரு பணிகளும் இணைவானவை; இவற்றை விளக்குவது தூக்கி நிறுத்துதல் என்பது.
சொல் பொருள் விளக்கம்
‘தொழுது எழுவாள்’ என்பது எப்படித் தொழுதலும் எழுதலும் இடையீடு அற்ற ஒன்றெனத் தோற்றம் தருவதோ அவ்வாறு ‘தூக்கி நிறுத்துதலும்’ ஒருங்கே நிகழ வேண்டும் என்பதே இதன் குறிப்பாம். இடையீடுபடின், இரட்டை வேலையாய், ஏற்பட்டுவிடும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்