சொல் பொருள்
தூசிதட்டல் – விலைபோகாதிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
ஈயோட்டல், கொசுவிரட்டல் என்பன போல்வது தூசி தட்டல். காலையில் கடை திறந்ததும் கடையில் பிடித்துள்ள தூசியைத் துடைத்தலும், பெருக்குதலும் கடைப்பொருள்களில் படிந்துள்ள தூசியைத் தட்டலுமே வேலை; விற்கும் வேலை இல்லை என்பதைக் குறிப்பது தூசி தட்டல். நாள்தோறும் தூசி தட்டிக் கொண்டிருக்குமாறு நேர்வது எப்படி? பழைய பொருள்கள் போகவில்லை; புதுப்பொருள்கள் வரவில்லை என்பதே பொருள். ஆதலால் விற்பனை இல்லை வேலை மட்டும் தீராத வேலை என்பதே குறிப்பாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்