சொல் பொருள்
தூண்டுதல் –ஒரு வினாவை எழுப்பி அதற்கு விளக்கம் பெற அவாவுதல்; விளக்கைத் தூண்டுதல்
துலக்கல் – பல் துலக்குதல், கலம் துலக்குதல் என்பவற்றை அறிக
சொல் பொருள் விளக்கம்
தூண்டுதல், துலக்குதல் என்னும் சொற்களின் இணைப்பு இது. தூண்டுதல் அடங்கியிருப்பதை மேலெழச் செய்தல்; ஒரு வினாவை எழுப்பி அதற்கு விளக்கம் பெற அவாவுதல்; விளக்கைத் தூண்டுதல், ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்’ என்று வழங்கும் பழமொழி தூண்டலை விளக்கும். ‘ஆப்பிள்பழம்’ விழுதல் ஐசக்கு நியூட்டனார்க்குத் தூண்டலாயதை அறிக. துலக்குதல் ஆவது விளக்குதல். விளக்கம் பெறச் செய்தல். ஒளிப்படுத்தல் பொருளவாம். பல் துலக்குதல், கலம் துலக்குதல் என்பவற்றை அறிக. தூண்டல் வழியால் உண்டாவது துலங்கல். அக்காட்சி (அ) அக்கருத்து என்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்