சொல் பொருள்
(வி) 1. (உலக்கையால்) குற்று, 2. செலுத்து,
சொல் பொருள் விளக்கம்
1. (உலக்கையால்) குற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pound as with a pestle, spur, goad
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12 சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/3,4 கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையிலுள்ள வாரைச் செலுத்தும் ஊசியினும் விரைந்தது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்