சொல் பொருள்
(பெ.அ) சுத்தமான, (வி.எ) தூவிய,
சொல் பொருள் விளக்கம்
சுத்தமான,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pure, sprinkled
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துன்னல் சிதாஅர் நீக்கி தூய கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 154,155 தையலையுடைய துணிகளை நீக்கி, தூயவாகிய (பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338 சிவந்த பூக்கள் தூவப்பட்ட (புல் முதலியவற்றைச்)செதுக்கிய முற்றத்தில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்