சொல் பொருள்
ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப் பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படுகின்றது
தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும்
கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும்.
மரத்தின் அடிப்பகுதியை (தூர்) தூரி என்பது சீர்காழி வட்டார வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
ஊஞ்சல் (ஊசல்) என்பது வரிப்பாடலாக இளங்கோவடிகளாரால் பாடுபுகழ் பெற்றது. ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப் பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படுகின்றது. ஊஞ்சலாடல் தூரியாடல் எனப்படும். அது தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும். இனிக்கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும். மரத்தின் அடிப்பகுதியை (தூர்) தூரி என்பது சீர்காழி வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்