சொல் பொருள்
(பெ) பறவைகளின் மென்மையான இறகு,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பொருள்பிணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the soft feather of a bird
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள் துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – கலி 72/1,2 பல அடுக்குகளால் உயர்ந்த நீலப் பட்டு விரித்த மென்மையான மெத்தையில் துணையோடு சேர்ந்த அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான தலையணையில் சாய்ந்துகொண்டு புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி செம் கணை செறித்த வன்கண் ஆடவர் – நற் 329/4-6 அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத் தம்முடைய செம்மையான அம்புகளில் இறுகக்கட்டிய கொடுமையான ஆண்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்