சொல் பொருள்
(வி) 1. துள்ளு, 2. விரலால் உந்து, 3. துளி அல்லது பொறியாகச் சிதறு, 4. (விரலால்) சுண்டிவிடு, 5. ஒன்றில் பட்டுச் சிதறி விழு
சொல் பொருள் விளக்கம்
1. துள்ளு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spring, leap, hop, twang, as a bow-string with the finger and thumb, splash, shoot as with the finger and thumb, strike and fly off
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8 சிறிய குட்டியைத் தழுவிக்கொண்ட துள்ளிய நடையினையுடைய இளைய பெண்மான் தினை கள் உண்ட தெறி கோல் மறவர் – அகம் 284/8 தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட நாணினைத் தெறித்துவிடுக்கும் அம்பினையுடைய மறவர்கள் அம் பணை நெடு வேய் கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/13,14 அழகிய பெரிய நெடிய மூங்கிலின் கணுக்கள் பிளக்கத் தெறித்து விழும் கழுவப்பெறாத முத்துக்கள் மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த குட பால் சில் உறை போல – புறம் 276/4,5 இளமைப்பான்மையையுடைய ஆயர்குல மகள் தன் செழுமையான நகத்தினால் சுண்டிவிட்ட ஒரு குடம் பாலில் விழுந்த சிலவாகிய பிரைமோர் போல அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4 சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் விழுந்து சிதறுவது போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்