சொல் பொருள்
தெளியக்கடைந்தவன் – தேர்ந்தவன்
சொல் பொருள் விளக்கம்
சிறுவயதிலேயே சில சிக்கலான வினாக்களை ஒருவன் எழுப்பினாலும், ஒருவர் சொன்னதை மறுத்து உரையாடி னாலும் ‘தெளியக்கடைந்தவன்’ என்பர். தெளியக் கடைதல் என்பது கடைந்த மோரை மீளக் கடைந்து வெண்ணெயெடுப்பது போல்வதாம். ‘கடைந்தமோரில் வெண்ணெய் எடுப்பவன்’ எனவும் கூறுவர். ‘தெளிவு’ என்பது தெளிந்த மோர். கட்டிமோர் கீழே படிய, தெளிவானது மேலே நீராக நிற்கும். அதில் மோரின் இயல்பும் இல்லை . அவ்வாறாக அதில் வெண்ணெய் எடுப்பது அருமை ஆகலின், அதனை எடுக்கவும் வல்லவன் எனக் கூறுவதாம். இது, இசை வழிப்பட்டதன்று எள்ளல் வழிப்பட்டது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்