சொல் பொருள்
(வி.அ) 1. நிச்சயமாக, 2. தெளிவாக, 3. எல்லாரும் அறியும்படியாக
சொல் பொருள் விளக்கம்
1. நிச்சயமாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
definitely, clearly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிக – நற் 11/3-5 அயலார் கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக அவர் வரமாட்டார் என்ற பிணக்கத்தைக் கொள்வதை ஒழிப்பாயாக நம் வரவினை புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் ———————————————– திதலை அல்குல் தே மொழியாட்கே – நற் 161/8-12 நம் வரவினை புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? – தெளிவாக —————————————————————————— மஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/6,7 யாவரும் காணும்படியாகத் துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்