Skip to content

சொல் பொருள்

(வி) 1. அதட்டு, 2. அணிகலன்கள் உரசிக்கொள்ளும்போது கலகலவென்று ஒலியெழுப்பல், 2 (பெ) வெண்ணெய் கடையும்போது ஏற்படும் ஒலிபோன்ற ஒலி

சொல் பொருள் விளக்கம்

1. அதட்டு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

drive or control by shouting; to bluster, utter threats;

make sound as jewels rub against themselves

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13

கடிய தார்க்குச்சிகளையுடைய, உப்புவணிகர் தம் காளைகளை அதட்டும் தெளிந்த குரல்கள்

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666

ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து

திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி – குறி 167,168

சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,

வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் – கலி 108/35,36

வெண்ணெய் கடையும் ஓசை கேட்கும் அளவுக்கு, வெகு தூரம் இல்லாமல்
மிகவும் அருகிலிருக்கிறது ஊர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *