Skip to content

சொல் பொருள்

(வி) 1. உவட்டு, திகட்டு, 2. திரளு,  3. ஒலியெழுப்பு,

சொல் பொருள் விளக்கம்

1. உவட்டு, திகட்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cloy, sate, assemble, collect together, make noise

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660

கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை உண்டு திகட்டி நிற்க

மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218

மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,

அவல்-தொறும் தேரை தெவிட்ட – ஐங் 453/1

பள்ளங்கள்தோறும் தவளைகள் ஆரவாரிக்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *