Skip to content

சொல் பொருள்

(வி) கொள், (பெ) பகை, பகைவர், 

சொல் பொருள் விளக்கம்

கொள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

get, take, obtain

enmity, enemy

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89

நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்

தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102

பகைமை பொருந்திய கிரவுஞ்ச மலையில் உன் திருத்தமான வேலினைப் பாய்ச்சி

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246

வலிமை பொருந்திய வெற்றியோடே பகைவரின் நிலத்தைக் காலிசெய்து,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *