சொல் பொருள்
காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும். கடற்கரை சார்ந்த கள்ளி, தாழை என்பவற்றையன்றித் தென்னை, பனை மரங்களின் உச்சியைத் தொடவும் ஏன் மறைக்கவும் கூட தேரிகள் உண்டு. தேர்போன்று உயர்ந்து தோன்றும் மணற் குவியலைத் தேரி என்பது அரிய உவமை ஆட்சியாம். தேரிப் பெயரால் ஊர்ப் பெயர்களும் நெல்லைப்
பகுதியில் உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்