சொல் பொருள்
(வி) 1. கூடு, சேர், 2. குவிந்திரு, சுருங்கு, 3. திரட்டு, சேகரி, 4. ஒன்றாக்கு, மொத்தமாக்கு,
சொல் பொருள் விளக்கம்
கூடு, சேர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
collect, accumulate, be narrow, be contracted, collect, gather, be summed up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர் உண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை – குறு 399/1,2 ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் ஒன்றுகூடிய பாசியைப் போன்றது பசலைநோய் தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65 குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய் எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/6 மோதுகின்ற அலைகள் திரட்டிச் சேர்த்த மணல் மேட்டின் நீண்ட கரையில் விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் – புறம் 53/6 விரித்துச் சொன்னால் பரக்கும், மொத்தமாகச் சொன்னால் பொருள் மிஞ்சிப்போகுமாதலால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்