சொல் பொருள்
கேழ்வரகு கூழ்மாவைத் தொக்கு என்பது கம்பம் வட்டார வழக்கு.
இளைத்தவனா என்னும் பொருளது
இரண்டு மூன்று பொருள்களைக் கலந்து அரைக்கும் துவையலைத் தொக்கு என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கேழ்வரகு மாவில் நீர்விட்டுக் கரைத்து போட வேண்டும். அளவு உப்புப் போட்டு வெயிலில் காயவைத்துப் புளிக்கச் செய்யும் கூழ்மாவைத் தொக்கு என்பது கம்பம் வட்டார வழக்கு. பலவும் தொகுத்துப் புளிக்க வைத்தலால் தொக்கு எனப் பெயர் பெற்றதாகும். தொக்கக்கால் = கூடினால்; தொக்கு, கூட்டப் பட்டது.
ஒன்றோடு ஒன்று இணைவது தொடக்கு, தொடுக்கு ஆகும். இரண்டு மூன்று பொருள்களைக் கலந்து அரைக்கும் துவையலைத் தொக்கு என்பது தென்னக வழக்கு. “உனக்கு நான் என்ன தொக்கா?” என்பது இளைத்தவனா என்னும் பொருளது. சோறு உண்ணத் தொட்டுக் கொள்வது (தொக்கு, துவையல்) போன்றவனா? என்னும் பொருளது. நெல்லை வழக்கு. இது கறிவேப்பிலை போன்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்