சொல் பொருள்
1. (வி) 1. தொடு, கட்டு, 2. பின்செல், 3. தொங்கவிடு,
2. (பெ) 1. சங்கிலி, 2. வரிசை, 3. நட்பு, 4. மாலை
சொல் பொருள் விளக்கம்
தொடு, கட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bind, tie, follow, pursue, hang, chain, row, series, friendship, connection, garland
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல் – ஐங் 191/2 கழியிலுள்ள பூக்கள் தொடுத்த மலர்ச் சரத்தை அணிந்த கரிய பலவான கூந்தலையும் கொண்ட வம்பலர் துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5 அவ்வழி வரும் புதியவர் துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால், கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் – பரி 23/33,34 கடிப்பு என்னும் அணியினால் தாழ்ந்து விழுந்த காதில் பொன்னாலாகிய குழை தொங்க மிளிருகின்ற ஒளிச்சுடர் பாய்தலால் பளிச்சிடும் ஒளியினையுடைய நெற்றியையுடைய பெண்டிரும், தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125 சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும் நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588 நெடிய வரிசையாகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம் பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால் பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/16-19 தண்ணொளி வீசும் முழுத்திங்களைப் போன்றது இவளின் அழகிய முகம், அந்த முகம் பாம்பின் வாய்ப்பட்ட மதியினைப் போல பசலை படர்ந்து தொலைந்துபோகும்போது – நெருக்கமான அன்புத்தொடர்பை அறுத்துக்கொண்டு, பிறர் நாட்டுக்குச் சென்று நீ அங்கே பெறும் நிலையான புதிய தொடர்புகளால் திருப்பித்தர முடியுமா? மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/9 மலர்ந்த வேங்கைப்பூக்களாலாய நிறைந்த மாலையைத் தரித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்