சொல் பொருள்
தொடல் என்பது சங்கிலி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தொடுத்த வளையங்களால் அமைந்த பின்னல் சங்கிலி. அது ‘தொடர்’ என்பது. தொடர்தலால் பெற்ற பெயர் அது. தொடுதல் என்பதும் தொடர்தலே ஆதலால் தொடல் என்பது சங்கிலி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. “தொடர்ப்படு ஞமலி” (சங்கலியில் கட்டப்பட்ட நாய்) என்பது புறநானூறு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்