சொல் பொருள்
தொவித்தல் – தோல் போக்கல், இடித்தல், அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
தோல் என்பது தொலி எனவும் வழங்கும். தவசங்களின் தோலைப் போக்குமாறு உலக்கையால் இடிப்பதைத் தொலித்தல் என்பது வழக்கு. அவ்வழக்கில் இருந்து அடித்தல் பொருளும் உண்டாயிற்று. ‘சண்டையில் தொலித்து விட்டான்’ என்பது கடுமையாக அடித்துவிட்டான் என்னும் பொருளுடன், தோல் உரியக் காயங்கள் உண்டாக்கி விட்டான் என்னும் பொருளும் உண்டாயிற்று. அடித்தல், தொலித்தல், குற்றுதல் என்பனவெல்லாம் இடித்தல் சார்புடைய சொற்களே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்