சொல் பொருள்
(வி) 1. சிரி, 2. மலர், 3. மகிழ், 4. ஒலியெழுப்பு, 5. ஏளனம் செய்,
சொல் பொருள் விளக்கம்
சிரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
laugh, smile, bloom, as flower, rejoice, make a sound, mock
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளு-தொறும் நகுவேன் தோழி – நற் 100/1 நினைக்கும்போதெல்லாம் சிரிக்கின்றேன் தோழி! நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200 மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும் சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21 ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/9 காற்சிலம்புகள் ஒலிக்க நடந்து சென்ற என் மகளுக்கு. இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/1-4 ஒளிவிட்டுப் பெரிதாக இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி அழகு பெறும்படியாக பொன்னாலான தேரினையுடைய தலைவன் வந்துவிட்டான் இப்போது; குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக! உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து எள்ளி நகையாடுவோம் நாம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்