சொல் பொருள்
நக்கல் – நகையாடுஞ் சொல்
நரகல் – அருவருப்பான சொல்
சொல் பொருள் விளக்கம்
“நக்கல் நரகல் பேச்சை நம்மிடம் வைத்துக் கொள்ளாதே” என்று தகவற்ற சொற்களைக் கடிவர். நகுதல்- நகைத்தல்; நக்கல் என்பதும் அது வேடிக்கை விளையாட்டு, கேலி கிண்டல் என்று சொல்பவை நக்கலாம். இடக்கரடக்கு முதலாம் இழிந்த சொற்களைச் சொல்லுதல் நரகலாம். நரகல் என்பது சொல்லின் தன்மை நோக்கிய உவமைச் சொல்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்