சொல் பொருள்
நச்சு – சொத்தை முழுவதும் நைத்துவிடச் செய்கின்ற பெருஞ் செலவுகள்.
பிச்சு – சொத்தைப் பிரித்துப் பிரித்து விற்கத்தக்க சிறு செலவுகள்.
சொல் பொருள் விளக்கம்
நச்சு – நைந்துபோகச் செய்வது; பிச்சு – பிய்ந்து போகச் செய்வது. பிய்த்துக் கொடுத்தலைப் ‘பிச்சுக் கொடுத்தல்’ என்பதும் வழக்காறு. பிய்த்தலைப் ‘புய்த்தல்’ என்பது இலக்கிய வழக்காறு. இனி ‘நச்சுப் பிச்சு’ எனப் பேசாதே என்பதும் வழக்காறு. நச்சரித்தும் பித்துப் பிடித்தும் பேசுதலைச் சுட்டுவது அது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்