சொல் பொருள்
நடப்பு – நடக்கும் செய்தி, ஆண்டு
சொல் பொருள் விளக்கம்
“இப்பொழுது செய்ய முடியாது; நடப்புக்குப் பார்க்கலாம்” என்பது வழக்கு. நடப்பு என்பது எதிர்வரும் ஆண்டு என்பதாம். இதில் நடக்கும் ஆண்டை நடப்பு என்பது வழக்கில்லை. ஆனால், “நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது” என்பதில் நடப்பு என்பது நடைமுறை என்றும் நிகழ்ச்சி என்றும் பொருள் தருவதாய் அமைகின்றது. இதற்கு மேல், “அவன் நடப்புச் சரியில்லை” என்பதில் நடப்பு ஒழுங்குப் பொருள் தருதல் வெளிப்படை. ஆயினும் ‘நடப்பு’ ‘நடை’ என்பதன் வழியாகவே வருகின்றது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்