சொல் பொருள்
1. (வி) நடுங்கு, 2. (பெ) நடுக்கம்,
சொல் பொருள் விளக்கம்
நடுங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shiver, tremble, trembling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/66-68 உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும் பரப்பி, தம் செருக்குக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற, தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் – கலி 118/1-3 வெற்றிப்புகழ் மிக்க ஒரு மன்னவன் தான் கைக்கொண்டுள்ள நல்லொழுக்கத்தால், நல்ல நெறிகளின்படி ஆட்சிசெய்து உயிர்களைக் காத்து மனத்தினில் நடுக்கமின்றி, தான் செய்த முந்தைய நல்வினைகளின் பயன்களைத் துய்ப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்