சொல் பொருள்
சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை எனப்படும்
பிறரை மதியா திருத்தலுமாம்.
சொல் பொருள் விளக்கம்
சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை எனப்படும். நிமிர்ந்து நிற்கும் அணைபோல் ஆட்ட அசைவின்றி நிற்கும் நிலையைச் சுட்டியது அது. “நட்டணைக் காரன்” “நட்டணை செய்யாதே” என்பவை தென்னக வழக்கு. நட்டணைக்கால் என்பது கால்மேல் கால் போட்டிருத்தல். பிறரை மதியா திருத்தலுமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்