சொல் பொருள்
நத்தம் புறம்போக்கு – வீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிலம்.
நத்தம் – ஊர்க்குப் பொதுவாம் மந்தை.
புறம்போக்கு – ஆடுமாடு மேய்தற்கென அரசு ஒதுக்கிய புல்நிலம்.
சொல் பொருள் விளக்கம்
ஊர் மாடு, ஆடு முதலியவை நத்தத்தில் தங்கும். நாய்களும் நத்தத்தில் திரியும். நாய் குரைத்து நத்தம் பாழாகுமா? என்பது பழமொழி.
புறம்போக்கு – மேய்ச்சல் நிலம் எனவும் வழங்கப்படும்.
நத்தம் ஊரடி சார்ந்தது; புறம்போக்கு – ஊர் நில புலங்களையெல்லாம் தாண்டிய ஆறு குளம் ஓடை முதலியவை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்