சொல் பொருள்
(வி) 1. கெடு, பொலிவிழ, நலனழி, பதனழி, 2. அணை, அவி, 3. வளர், பெருகு, 4. தழை 5. வளமையடை, 6. ஒளிர், பொலிவடை, 2. (பெ) நத்தை,
சொல் பொருள் விளக்கம்
கெடு, பொலிவிழ, நலனழி, பதனழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
decay, become spoiled, waste, perish, be extinguished, put out, as a lamp, grow, increase, wax, flourish, grow well, prosper, turn bright, become lustrous, snail
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த தேர் அகல் அல்குல் அம் வரி வாட இறந்தோர் மன்ற தாமே – ஐங் 316/1-3 பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத் தேர் போன்ற அகலமுடைய அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடிப்போகச் சென்றுவிட்டார் தாமே ஐவனம் காவல் பெய் தீ நந்தின் ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/6,7 ஐவன நெல்லைக் காப்பார் காவலுக்கு இடப்பட்ட தீ அவ்விடத்து அவிந்துபோனவிடத்து ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும் தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2 தீதற்றவனின் செல்வம் படிப்படியாக வளர்வது போல் இனிய கரைகளில் மரங்கள் சிறிதுசிறிதாகத் துளிர்க்கவும் கானம் நந்திய செம் நில பெரு வழி – முல் 97 காடு தழைத்த செம்மண் பெருவழியில் நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16 நான்காக வேறுபட்டு நிற்கும் அகன்ற இடங்களாகிய திசைகள் ஒன்றுபோல ஈட்டம் பெற பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் செலின் நந்தி செறின் சாம்பும் இவள் – கலி 78/19,20 பெய்தால் செழிப்புற்று, பொய்த்தால் உலர்ந்துபோகும் விளைநிலத்திற்கு மழையைப் போல, நான் சென்றால் பொலிவடைந்து, செல்லாமல் வெறுத்தால் வாடிப்போவாள் இவள் கதிர் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை – புறம் 266/4 கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்