சொல் பொருள்
(பெ) பரப்பு, அகற்சி,
சொல் பொருள் விளக்கம்
பரப்பு, அகற்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wide extent, expansiveness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த நனம் என்ற சொல் கலித்தொகையில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நனம் தலை என்ற தொடராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. நாள்அங்காடி நனம் தலை கம்பலை – மது 430 நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539 வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 193 நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270 சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1 நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/3 அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1 வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/17 இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12 பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3 கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6 பாறைகள் உயரே நிற்கும் அகன்ற மலைச்சாரலில் கூடித்திரியும் நாடனே கேட்பாயாக!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்