சொல் பொருள்
அகலத் தடவி வருடுதலை நனவுதல் என்பது நெல்லை வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
அகலத் தடவி வருடுதலை நனவுதல் என்பது நெல்லை வழக்கு. ‘நனந்தலை உலகம்’ என்பது, அகன்ற விரிந்த உலகம் என்னும் பொருளது. அது போல் அகலத் தடவுதல் – குத்தல் கிள்ளல் பிடித்தல் இல்லாமல் – வருடுதல் நனவுதல் ஆயது. நன என்னும் உரிச்சொல் வழியது இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்