சொல் பொருள்
நன்றி என்னும் பொருளில் பெரியகுளம் வட்டாரத்தில் நன்னி என்பது வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
நன்றி என்னும் பொருளில் பெரியகுளம் வட்டாரத்தில் நன்னி என்பது வழங்குகின்றது. ‘நன்னர்’ என்பது போல் நன்னி கிளர்ந்தது போலும். நன்னர் என்பது ‘போனசு’ என்பதற்குப் பாவாணரால் தரப்பட்ட சொல். “நன்னர் நன்மொழி” என்பது புறப்பொருள் வெண்பாமாலை. “நன்னியும் குன்னியும்” என்பது இணைச் சொல். சின்னதும் சிறியதும் போல்வது. இது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்