சொல் பொருள்
நயம் – நயந்து அல்லது நயத்தால் பயன்படுத்திக் கொள்ளுதல்.
பயம் – பயப்படுத்தி அல்லது அச்சுறுத்திப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
சொல் பொருள் விளக்கம்
நயபயம் காட்டி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுதல் சிலர் இயற்கையாம். ஆடிக் கறப்பதை ஆடிக் கறத்தல், பாடிக் கறப்பதைப் பாடிக் கறத்தல் போல் பயன்படுத்துதல் நயமாம். வல்லாண்மையாலும், சூழ்ச்சித் திறத்தாலும் ஒருவனை அச்சுறுத்தித் தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளுதல் பயமாம். இவ்விரண்டும் உலகிடையில் காணக்கூடுவனவேயாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்