சொல் பொருள்
(வி) 1. விருப்பம்கொள், 2. இனிமை தோன்று,
சொல் பொருள் விளக்கம்
விருப்பம்கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
have a desire, be sweet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் – கலி 40/31,32 அவனுடைய மலையை நாம் பாட, அதனை விரும்பிக்கேட்டருளி, உடல் பூரித்த உவகையனாய் வந்துவிட்டான் செம் கண் இரும் குயில் நயவர கூஉம் – அகம் 229/19 சிவந்த கண்ணினையுடைய கரிய குயில் இனிமை தோன்றக் கூவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்