சொல் பொருள்
நரம்பு – நரம்பு வைத்துப் போன அல்லது முற்றிய நாற்று.
நாற்று – நடுதற்குரிய பருவ நிலையில் அமைந்துள்ள நாற்று.
சொல் பொருள் விளக்கம்
காய்கறி தவச வித்துக்களை நாற்றாங்காலில் முளைக்கச் செய்து வளர்த்து உரிய வள்ர்ச்சி நிலையில் நடவு செய்தல் வேளாண்மை முறையாம். அம்முறையில் நரம்பு வைத்த அல்லது மட்டை வைத்த நாற்று முற்றியதற்குச் சான்றாம். அந்நாற்றை நட்டால் பக்கம் விரியாது. நட்டது மட்டுமே சின்னஞ்சிறு கதிர் வாங்கி அல்லது பயன் தந்து நின்று விடும். “நரம்பும் நாற்றுமாக இருக்கிறது; ஒரு பாதியே பயன்படும்” என்பது வழக்காறு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்