சொல் பொருள்
மக்கள், கூட்டம்.
சொல் பொருள் விளக்கம்
மக்கள் என்னும் பொருளில் ‘நருள்’ பெருத்துவிட்டது என்பது நெல்லை வழக்கு. நரலுதல் = ஒலித்தல். மக்கள் பெருக்கம் வீட்டிலும் வெளியிலும் ஒலிப்பெருக்காக நரலுதல் இலக்கிய வழக்கு. ‘சனம்’ என்னும் சொல் வந்ததால் ‘நருள்’ ஒழிந்துவிட்டது.
நரலுதல் என்பது ஒலித்தல். மக்கள் கூட்டமாகக் கூடிய இடத்தில் ஒலி மிக்கிருத்தல் வெளிப்படை. ஆதலால் ஒலித்தல் பொருள் தரும் ‘நரல்’ அவ்வொலிக்கு அடிப்படையாக அமைந்த கூட்டத்தை ‘நரல்’ எனக் குறித்து, ‘நருள்’ என்றாகியது. ‘நருள் பெருத்துப் போனது’ என்பதில், மக்கள் பெருகி விட்டனர் என்னும் குறிப்புளது. “இவ்வளவு பதவலா?” என்பதும் மக்களின் கூட்டம் என்னும் பொருளே தருதலும் வழக்கே. பதவல் பார்க்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்