Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க – நலம் 1. உயர்வு, 2. நல்ல நிலை, 3. அழகு, 4. நன்மை,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க – நலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

excellence, well-being, beauty, good

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ – நற் 45/6-8

கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,
 கூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது?
 எம்மிடம் புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள்,

தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி – நற் 56/8

முன்பிருந்த என்னுடைய நல்ல நிலையை இழந்துபோன எனது பசலை பாய்ந்த பொன் நிறத்தைப் பார்த்து

வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/2,3

மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி,
பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/11

நல்வினையினது நன்மையும், தீவினையினது தீமையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *