Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நன்மை, 2. நல்ல நிலை, 3. அழகு, 4. அன்பு, 5. சிவந்த நிறம்,

சொல் பொருள் விளக்கம்

நன்மை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

good, well-being, beauty, love, red colour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே – மது 104,105

நன்மை அமைந்த அணிகலன்களைக் கொடுக்கும்
பல குட்ட நாட்டு அரசரை வென்ற வேந்தனே

தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர் – நற் 14/1,2

எமது பழைய கவின் தொலைய, எமது தோளின் நல்ல நிலையெல்லாம் அழிந்துபோக
எமக்கு அருளாராய் எம்மை விட்டு நீங்கினர்

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31

நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்

புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 166

தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்கு

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109

செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *