சொல் பொருள்
நலம் – பூப்பு நீராட்டு மணம் போன்ற நன்னிகழ்ச்சிகள்.
பொலம் – நோய் இறப்பு போன்ற தீய நிகழ்ச்சிகள்.
சொல் பொருள் விளக்கம்
நல்லது பொல்லது என்பதும் இதுவே. உற்றார் உறவாக இருந்தும் பகையாகி இருப்பாரும், கொண்டு கொடுத்தல் இல்லாத அயலாராக இருப்பாரும் கூட ஓரூரில் நிகழும் நலம் பொலங்களைத் தள்ளி வைக்க மாட்டார். ஊரொழுங்கு அது வாகும். அவ்வாறு செய்து ஊர்ப் பகையைத் தேடிக் கொள்ள எவரும் விரும்பார். “யாராக இருந்தாலும் நலம் பொலம் தள்ளலாமா?” என்பது சிற்றூர் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்