சொல் பொருள்
(பெ) 1. கொடுத்தல், 2. அன்பு செலுத்தல், 3. அருள் செய்தல்,
சொல் பொருள் விளக்கம்
கொடுத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bestowing, granting, show love, show kindness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரம்பு கண் உடைய ஏகி கரம்பை புது வழி படுத்த மதி உடை வலவோய் இன்று தந்தனை தேரோ நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/4-7 பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப் பரப்பு நொறுங்கிப்போகும்படி சென்று, கரம்பை நிலத்தில் புதுவழியை உண்டாக்கிய அறிவுடைய பாகனே! இன்று நீ கொண்டுவந்து சேர்த்தது தேரினையோ? நோயினால்,வருந்தி வாழும் தலைவியை எனக்குத் தருதலால்! நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1 (உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார் கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்_வழி உடையை இல்_வழி இலையே – பரி 4/49-51 மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும், கொடுமையும், செம்மையும், வெம்மையும், தண்மையும் உள்ளவரிடம் நீயும் அக் குணங்களை உடையவன், இவை இல்லாதவரிடம் நீயும் அவற்றை இல்லாதவனாகவே இருக்கிறாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்