சொல் பொருள்
(பெ) 1. நாக்கு, 2. மணியின் நாக்கு, 3. பேச்சுத்திறன், பாடும்திறன், ஓதும்திறன்,
சொல் பொருள் விளக்கம்
நாக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tongue, clapper of a bell, ability to speak, sing or recite
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11 முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின் நல்ல நாவினை ஒத்த சிறிய பாதங்களையும், நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50 நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும் நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13 ஓதும்திறனில் வன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்