Skip to content
நாகம்

நாகம் என்பதன் பொருள்பாம்பு.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. ஒரு வகை பாம்பு, 2. சுரபுன்னை 3. நாகமரம், 4. யானை,

2. வேர்ச்சொல்லியல்

இது snake என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது நாகம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

snake, Long leaved two-sepalled gamboge, Iron wood of Ceylon. Mesua ferrea; elephant

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்/அகரு வழை ஞெமை ஆரம் இனைய - பரி  12/4,5

ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின் பெயரைக்கொண்ட நாகமரமும்

நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88

நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த

நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94

நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 520

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – சிறு 116

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் - சிறு 96

நாகம் நாணா மலை வில் ஆக - பரி 5/24

நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரி 12/80

கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்/மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் - அகம் 73/12,13

திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் - அகம் 138/17

வேக வெம் திறல் நாகம் புக்கு என - புறம் 37/2

இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம் - நாலடி:7 6/3

விரி நிற நாகம் விடர் உளதேனும் - நாலடி:17 4/1

தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம்
விரி பெடையோடு ஆடி விட்டு அற்று - நாலடி:24 10/3,4

மந்திரத்தினால் பிணிப்பர் மா நாகம் கொந்தி - நான்மணி:10/2

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா - இன்னா40:29/1

அரு மணி நாகம் அனுங்க செரு மன்னர் - கார்40:20/3

ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் - கள40:26/3

முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி - திணை50:28/2

ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் - திணை150:13/3

கை வாய நாகம் சேர் காடு - திணை150:13/4

நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி தன் - திணை150:16/1

நாகம் தோய் நாகம் என இவற்றை போக - திணை150:28/2

ஐம் தலை நாகம் புரையும் அணி கார்தான் - திணை150:107/3

கத நாகம் புற்று அடைய கார் ஏறு சீற - திணை150:117/1

மத நாகம் மாறு முழங்க புதல் நாகம்
பொன் பயந்த வெள்ளி புறமாக பூங்கோதாய் - திணை150:117/2,3

நாகம் உயிர்ப்ப கெடும் - குறள்:77 3/2

நாகம் நாறு நரந்தை நிரந்தன - சிலப்.மது 12/75

அரு மணி இழந்த நாகம் போன்றதும் - சிலப்.மது 13/58

நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - சிலப்.வஞ்சி 25/18

நல் மணி இழந்த நாகம் போன்று அவள் - மணி 7/131

வேக வெம் தீ நாகம் கிடந்த - மணி 20/98

அழல் கண் நாகம் ஆர் உயிர் உண்ண - மணி 23/69

நல் மணி இழந்த நாகம் போன்று - மணி 25/195

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *