சொல் பொருள்
(பெ) 1. கலப்பை, 2. நாஞ்சில் நாடு,
சொல் பொருள் விளக்கம்
கலப்பை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plough, The name of a country around the present Nagercoil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/4,5 வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய யானை, வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க செம் வரை படப்பை நாஞ்சில் பொருந – புறம் 137/12 செங்குத்தான மலைப்பக்கத்தையுடைய நாஞ்சில் என்னும் மலையையுடைய பொருநனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்