சொல் பொருள்
நாடி – நாடித் துடிப்பு
நரம்பு – உணர்வுக்கு இடமாகிய நரம்பு.
சொல் பொருள் விளக்கம்
நரம்புக்கும், நாடிக்கும் மிகு தொடர்புண்மை வெளிப்படை. நாடிப் பார்ப்பதற்கு இடமாக இருப்பது குருதிக் குழாய். அதனுள் ஓடும் குருதியோட்டம் கொண்டே துடிப்பளவு காணப்படுகின்றது. “ வளி முதலா (வாதம் முதலா) எண்ணிய மூன்று” என்னும் குறளால் (குறள் 941) நாடித் துடிப்பு வகைப் புலப்படும். “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி” என வரும் குறளால் (குறள் 947) நாடிச் சீர் புலப்படும். நாடி அறிவது ‘நாடி நூல்கள் ‘வர்ம நூல்’ என வழங்கின.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்