Skip to content

சொல் பொருள்

(வி) 1. நிறுவு, நிலைநிறுத்து, 2. ஊன்று, நடு, விளக்கேற்று, 3. ஏற்படுத்து, உண்டாக்கு

சொல் பொருள் விளக்கம்

நிறுவு, நிலைநிறுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

establish, institute, set up, instal, form, create

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறன்நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/7-9

அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து
அறத்தின் திறப்பாடு இல்லாத ஒருவனை நிலைநிறுத்தி, முறை கலங்கி
கொடுங்கோல் செய்தேன் ஆகுக

யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10

இராபொழுதைக் காத்திருப்போர் ஏற்றிய நெருங்கிய விளக்குகள்

மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15

மத்தி என்பவனால் உருவாக்கப்பட்ட கல் பொருந்திய குளிர்ந்த துறைமுகத்தே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *