Skip to content

சொல் பொருள்

1 (வி) 1. மணம் வீசு, 2. இனிய மணம்வீசு, 3. தீய மணம்வீசு, 4. முளை, 5. தோன்று, வெளிப்படு, 6. தோன்று, பிற, 

2. (பெ) நாற்று, பிடுங்கி நடக்கூடிய இளம்பயிர்,

சொல் பொருள் விளக்கம்

மணம் வீசு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

emit a smell, emit a sweet smell, stink, sprout, shoot forth, appear, manifest, come into being, be born, Seedlings reared for transplantation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பசு முகை தாது நாறும் நறு நுதல் – குறு 323/5

பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய

நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் – மலை 182,183

நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள்

நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/8,9

நரந்தம்பூ மணக்கும் தன் கையால்
புலால் வீசும் என் தலையைத் தடவுவான்

பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6

பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த இடத்தில்

சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/13

ஒளிர்கின்ற பாண்டில் விளக்கின் இறைத்தன்மை இனிமையாக வெளிப்படும் வெளிச்சத்தில்,

தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து – மது 3,4

தேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடைய
மலைகள் தோன்றியுள்ள அகன்ற உலகத்தின்கண்

முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212

முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *