சொல் பொருள்
நாள் – இரவும் பகலும் கூடிய ஒரு நாள்
பொழுது – ஒரு நாளில் திட்டப்படுத்தப்பட்ட ஒரு பொழுது.
சொல் பொருள் விளக்கம்
கதிரோனைக் கொண்டு பொழுது கணக்கிடப்படும். ‘பொழுது புறப்பட்டது’ ‘பொழுது விழுந்தது’ என்பன போல வழங்கும் வழக்குகளால் பொழுது கதிராதல் விளங்கும். கதிர் உள்ள போது மூன்று பொழுதும் விழுந்த போது மூன்று பொழுதுமாக ஆறு பொழுது கூறுவர். அவற்றையும் பகுத்து நல்பொழுது அல்பொழுது எனக் கணித்துக் கூறுவர். “நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை” என்பது தெளிவுரை. நாளும் பொழுதும் பார்க்கவே நாளும் பொழுதும் செலவிடுவோர் மிகப்பலர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்