சொல் பொருள்
(பெ) 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு,
சொல் பொருள் விளக்கம்
24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
indian hour = 24 minutes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 670,671 நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல, வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப, முன் நாட்களில் நாழிகை வட்டில் போன்ற கருவிகளை வைத்து, ஒரு நாளின் பொழுதுகளை அளப்பர். அவ்வாறு அளந்து சொல்வோர் மன்னனின் அரண்மனையில் இருந்து அவ்வப்போது மன்னனுக்கு நாழிகைக் கணக்கைத் தெரிவிப்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்