சொல் பொருள்
(பெ) 1. வண்ணம், 2. மார்பு
சொல் பொருள் விளக்கம்
வண்ணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
colour, bosom, breast
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினை பொலிந்த பச்சையொடு – சிறு 225,226 காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப, புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/11,12 மிக்க துன்பத்தை அடைந்திருப்பார் ஒருவரின் அரிய மார்பினைக் குறித்து கூரிய வேலை எறிவார் போல வருந்துதலை ஒழியாது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்