Skip to content

சொல் பொருள்

(வி) 1. உயர், மேலெழும்பு, 2. நிமிர், 3. நெடுக, உயரமான வளர், 4. வெள்ளம் உயர்ந்து கரைபுரளு,

சொல் பொருள் விளக்கம்

உயர், மேலெழும்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rise, ascend vertically, be erect, hold head erect, grow vertically high, flood flow high and overflow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா கடல் நிவந்து எழுதரும்
செஞ்ஞாயிற்று கவினை மாதோ – புறம் 4/15,16

கரிய கடலின்கண்ணே ஓங்கி எழுகின்ற
செய்ய ஞாயிற்றினது ஒளியை உடையை

கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/9

கழியிடமாகிய சேர்ப்பின்கண் தலை நிமிர்ந்துசெல்லும் விரைந்த செலவினையுடைய குதிரை

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12

பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,

சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 244-246

சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
கீழ்க்கடலுக்குப் பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *