சொல் பொருள்
நீட்டல் – தருதல், அடித்தல், பெருகப்பேசல்
சொல் பொருள் விளக்கம்
கைந்நீட்டல் தருதல் பொருளதாதல் அறிவோம். அன்றியும் கைந்நீட்டல் அடித்தல் பொருளதாதலும் அறிவோம். இவண் நீட்டல் என்பது கைந்நீட்டல் போல வந்தது. “நீட்டிக் குறைக்க நெடும்பகை” என்பது கொடைப்பொருள் தரும் நீட்டல். “இனி நீட்டினால் என்கையும் நீளும்” என்பது அடித்தல் பொருள் தரும் நீட்டல். உனக்கு வாய் நீண்டுவிட்டது என்பது வாய் என்பது நாவைக் குறித்து நாவு பேச்சைக் குறித்து வந்ததாம். “உனக்கு நாக்கு நீளம்” என்பதும் இப்பொருளதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்