சொல் பொருள்
(வி) 1. புலன்களால் உணர்ந்து அனுபவி, துய், 2. அருந்து
சொல் பொருள் விளக்கம்
புலன்களால் உணர்ந்து அனுபவி, துய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enjoy through the senses, experience, eat and drink
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஞ்சிலோதி அசையல் யாவதும் அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 180,181 “அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைத் துய்த்து மகிழ்வேன்” என்று சொல்லி வசை இல் செல்வ வானவரம்ப இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம் தருக என விழையா தா இல் நெஞ்சத்து பகுத்தூண் தொகுத்த ஆண்மை பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/12-16 உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே அருந்துவோம், கொண்டுவாருங்கள்’ என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய் பகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்